உனையே நினைந்தும், உனையே புகழ்ந்தும்
உயிர்வாழும் ஏழை இதயம் இனியாரை நாடும்? எதுநேர்ந்த போதும்
இறைவீ, உனக்கே அபயம்! நினையேனும் உள்ளம் இளகாய் எனில்
திருநாடு யாரை இகழும்?
சிவனார்தம் பாகம் பிரியாது வாழும்
திருவெற்றி யூரில் உமையே! 33
அனைத்தும் நீயென….
பல்லவி
அனைத்தும் நீயென உனையே நினந்து
உனது புகழ் பாடுமெனக்கினி யார் துணை
அனுபல்லவி
மனதிலுனது மலரடியே துதித்தேன்
அனுதினமும் திருவெற்றியூர் உமையே
சரணம்
சினந்து நீ வெறுத்தாலும் பரிந்தெடுத்தணைத்தாலும்
உனக்கே அபயம் கேசவன் சோதரி
எனக்கெது நேர்ந்தாலும் காப்பதுன் கடனே
புனலேந்தும் சிவனார் பாகம் பிரியாளே
No comments:
Post a Comment