அபயமருள்வாய்….
பல்லவி
அபயமருள்வாய் அம்பிகையே உமையே
உபாயம் வேறறியேன் உனைப் பணிவதன்றி
அனுபல்லவி
சுபமுடன் மயூரநாதனுடனிருக்கும்
அபயாம்பிகையே கேசவன் சோதரி
சரணம்
நிலைதடுமாறி தீச்செயல்கள் புரிந்தாலும்
மலைமகளுன் கருணையினால் அவையனைத்தும் மாறிவிடும்
மலையளவு துயர்வரினும் உனதருளாலவை யாவும்
அலைகடலலைபோலே தானே விலகிடும்
No comments:
Post a Comment