அம்பிகையே நிறைந்த கலைகளுடன் உதிக்கின்ற
சந்திரனைப் போல் அழகியதும் பக்தர்களிடம் அருள் காட்டுவதும், எப்போதும் மலர்ந்த தாமரை இதழ்களின் அழகை வெல்கிற ஆற்றல் வாய்ந்த கண்களுள்ளதும், ஆநந்தத்துடன் புன்முறுவல் புரிவதும், அடிக்கடி ஆர்வத்துடன் பொங்கி எழுவதும் மல்லிகை போன்ற அழகிய பற்களின் வரிசையால் நிலவைப் போன்று ஒளி வீசுவதுமான வட்டமான முகத்தைத் தியானிக்கிறேன்.(39)
அம்பிகையே…….
பல்லவி
அம்பிகையே உன்னை அனுதினம் துதித்தேன்
நம்பித்துதிப்பவர்க்கின்பம் அளிப்பவளே
அனுபல்லவி
உம்பர் முனிவர் பணி கேசவன் சோதரியே
வெம்பவக் கடல் கடக்க உனதருள் வேண்டியே
சரணம்
அம்புய இதழ்களைப் பழிக்கும் விழியுடையவளே
புன்னகை ததும்பும் இன்முகத்தவளே
மல்லிகை மொட்டுப் பல்வரிசை காட்டி
வெண்ணிலவு முகத்துடனே அடியார்க்கருளும்
No comments:
Post a Comment