நீயேஎன் செல்வம்; நீயேஎன் இன்பம்; நீயே என் பாதை-பயணம்! ஓயாது கூவும் என்வீட்டுப் புள்ளும் ஒழியாது தேடும் சிகரம்! பேச ஆவலோடு பூபாளம் பாடத் திறவாத தென்ன நயனம்? சிவனார்தம் பாகம் பிரியாது வாழும் திருவெற்றி யூரில் உமையே! 34
அல்ல லிடர் நீங்கி….
பல்லவி
அல்லிடர் நீங்கி அகிலம் தனில் வாழ
மெல்லிடையாள் வெற்றியூர் உமை நீயே துணை
அனுல்லவி
வல்லரக்கரை மாய்த்த கேசவன் சோதரி
எல்லாமும் நீயெனவே மலரடி பணிந்தேன்
சரணம்
செல்வமும் நீயே இன்பமும் நீயே
புள்ளினம் தேடும் சிகரமும் நீயே
செல்லும் பாதையும் பயணமும் நீயே
மல்லீச்வரன் சிவனின் பாகம் பிரியாளே
No comments:
Post a Comment