சிவனை…. …
பல்லவி
சிவனைத் துதித்திடுவாய் மனமே ….( சதா)
பவ பயம் கவலைகள் துயரிடர் நீங்கிட
அனுபல்லவி
அவனன்றி ஓரணுவுமயசையாதே
புவனமியங்குவது அவனருளாலே ….(சதா)
சரணம்
தவயோகியரும் ஞானியரும் முனிவர்களும்
சிவனடியார்களும் வணங்கிடுமீசனை
குவலயம் போற்றும் கேசவன் நேசனை
சிவகாமி உடனுறை சிதம்பரநாதனை
No comments:
Post a Comment