ஆடிய பாதத்தை…..
பல்லவி
ஆடிய பாதத்தை தேடித் துதித்தேன்
நாடித்துதிப்பவர் பங்கிலுறைபவனை
அனுபல்லவி
ஈடிணையில்லாத தனிப்பெருங்கடவுளை
கோடி சூரிய ஒளியினும் ஒளியுடைய
சரணம்
தேடித் திரிந்து கேசவனும் பிரமனும்
அடி முடி காண அலைந்து திரிந்த
வேடிக்கையை ரசித்த அருணாசலனை
பாடிப் பரவசித்து பதமலர் பணிந்தே
No comments:
Post a Comment