வெல்க வெல்க….
பல்லவி
வெல்க வெல்க ஶ்ரீ ரகுராமா
பொல்லா அரக்கன் ராவணனை வதைத்தவனே
அனுபல்லவி
மல்லீச்வரன் சிவனின் வில்லை ஒடித்து
நல்லாள் சீதையின் கரம் பிடித்த கேசவனே
சரணம்
சொல்லொன்று பாணமொன்று என்ற புகழ் கொண்டவனே
கல்லைக் காரிகையாய்ச் செய்த கருணாகரனே
அல்லலிடர் பவவினை போக்கிடும் ரகுவரனே
எல்லாமும் நீயெனவே உன் மலரடி பணிந்தேன்
No comments:
Post a Comment