ஆத்யே ஆகம ஸம்ப்ரதாய நிபுணே ஆசார்யவர்யார்சிதே ஆதாராதி ஸ்ரோஜபீட நிலயே ஆலோல நீலாலகே / ஆதாம்ராதரசாரு மந்தஹிஸிதே ஆபீநவக்ஷோருஹே ஆப்ரஹ்மாசியுத சங்கரார்சிதபதே வந்தே (அ)கிலாண்டேஸ்வரி !!
முதல்வளே (ஆதியானவளே). ஆகம மரபுகளில் தேர்ந்தவளே, ஆசார்ய பெருமக்களால் பூஜிக்கப்பட்டவளே. ஆதாரம் முதலான ஆறுதாமரைப் பீடங்களில் வீற்றிருப்பவளே, அசைகின்ற கருங்கூந்தலை உடையவளே. சிவந்த கீழ் உதட்டில் பரவும் அழகிய புன்சிரிப்புள்ளவளே. பருத்த ஸ்தனமுள்ளவளே, பிரும்மன், விஷ்ணு. சங்கரன் ஆகியோரால் பூஜிக்கப்பெற்ற
திருவடிகளை உடையவளே, அகிலாண்டேஸ்வரியே உன்னை நமஸ்கரிக்கின்றேன்.
அகிலாண்டேச்வரியின்….
பல்லவி
அகிலாண்டேச்வரியின் மலரடி பணிந்தேன்
ஆன்றோர் சான்றோரனைவரும் போற்றும்
அனுபல்லவி
ஜகமெலாம் புகழும் கேசவன் சோதரி
பகலவனைப் பழிக்கும் பேரொளியுடைய
சரணம்
ஆகம வேதங்களனைத்துமறிந்தவள்
ஆதியும் முதலும் அனைத்துமானவள்
அறுகமல பீடங்களில் அமர்ந்திருப்பவள்
அரனரி பிரமன் பணிந்திடும் சுகபாணி
துரிதம்
கருத்த கூந்தலும் பருத்த தனமும்
செம்பவளவாயில் புன்னகையுமேந்தும்
No comments:
Post a Comment