கமலையே….
பல்லவி
கமலையே உந்தன் கழலடி பணிந்தேன்
சமயமிதே எனை ஆண்டருள்வாயென
அனுபல்லவி
இமவான் மகளே கேசவன் சோதரி
உமையே சங்கரன் பங்கிலுறைபவளே
சரணம்
சமமெனத் தனக்கொருவரில்லாத பரதேவி
குமரனுக்கு வேல் தந்த வேல்நெடுங்கணி
கமல மலரேந்தி அபயகரம் காட்டும்
ரமா வாணி பணி பராசக்தியே
No comments:
Post a Comment