அனைத்தும் நீயே…..
பல்லவி
அனைத்தும் நீயே ஆதிபராசக்தியே
உனையே துதித்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
தினையளவுனையே நினைத்தாலும் போதும்
பனையளவு கருணை அளித்துக் காப்பவளே
சரணம்
நினைத்துனைப் பணிந்திடும் அடியவர்க்கெல்லாம்
வினைப்பயன் களைந்திடும் கேசவன் சோதரி
சுனை நீராய்ச் சுரக்குமுன்னருள் தந்து
எனையாண்டருளவே வேண்டி வணங்கினேன்
No comments:
Post a Comment