துதித்தேன்……
பல்லவி
துதித்தேன் ஆயிரத்தெண் விநாயகனை
கதியவன் பதமென கழலடி பணிந்து
அனுபல்லவி
மதியணிந்தவனை மலைமகள் மைந்தனை
கதிரொளியை மிஞ்சும் ஒளியுடையவனை
சரணம்
சதுர் மறையும் சதுர்முகனும் கரம் பணிந்தேத்தும்
சதுர்புஜனை கரிமுகனை கேசவன் மருகனை
கதிர் வேலன் தமயனை காரமர் மேனியனை
பதிகளில் சிறந்த ஆறுமுக மண்டலத்தில்
No comments:
Post a Comment