கந்தன் பதமலரை….
பல்லவி
கந்தன் பதமலரை சென்னியில் வைத்தேன்
எந்தனைக் காத்தருள வேண்டுமெனத் துதித்து
துரிதம்
நந்தி கணங்கள் நரர் சுரர் நாரதர்
நான்முகனனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
தந்தைக்கு மந்திரத்தின் பொருள் சொன்ன குருபரன்
சிந்தை கவர்ந்திடும் சிங்கார வேலன்
சரணம்
விந்தைகள் பல புரிந்த வள்ளி மணாளன்
உந்தி கமலன் கேசவன் மருகன்
இந்திரன் மகளை மணந்த சிவ பாலன்
செந்திலாண்டவன் கார்த்திகேயன்
No comments:
Post a Comment