ஸ்ரீ ஸ்துதி :(17).....!!!
ச்ரேயஸ்காமா: கமலநிலயே சித்ரமாம்நாய வாசாம்சூ
டாபீடம் தவ பத யுகம் சேதஸா தாரயந்த: |
சத்ரச்சாயா ஸுபக சிரஸ சாமர ஸ்மேர பார்ச்வா:
ச்லாகா சப்த ச்ரவண முதிதா: ஸ்ரக்விண: ஸஞ்சரந்தி ||
தாமரையில் உரையும் பிராட்டியே! வேதமாகிய பெண்ணிற்கு தலையில் அற்புதாமாக அணியும் ஆபரணம் போன்று விளங்குகிறது உன் திருவடி, இப்படி வேதம் உன்னை பலவாராய் துதிபப்தால் பெருமையுடனேயே விளங்குகிறது, இப்படி இருக்க எவர் உன்னிடமே மிகவும் பக்தியுடன் செல்வத்தையோ, பெரிய பூமியையோ வேண்டுகிறார்கள். அப்படிப்பட்ட வர்களுக்கு நல்ல வெண்மையான குடையின் கீழும், இருபுறத்திலும் சாமரம் வீசப்பட்டு, பல மக்களால் புகழ்பாடபட்டு வெற்றியுடன் அலைவது உன்னுடைய சிறிய கடைக்கண் பார்வை அனுகிரஹமன்றோ.
பெரிய பிராட்டியே!
உன் திருவடிகளை வேதங்கள் தம் முடிக்கு ஏற்ற அற்புதமான அணிகளாகத் தரிக்கின்றன. அதாவது வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றன. உலகில் மண்டலாதிபதியாகவோ சக்ரவர்த்திகளாகவோ பெரிய பிரபுக்களாகவோ ஆக்கவேண்டுமென்று விரும்புபவர்கள் உன் திருவடிகளைத் தன் உள்ளத்தில் த்யானிக்கின்றனர்.உன் திருவருளால் அவர்கள் விரும்பும் ஸ்தானத்தைப் பெறுகின்றனர்.
ஒற்றை வெண்குடை நிழலில் அமர்கின்றனர்.
இரு மருங்கும் சாமரம் வீசப் பெறுகின்றனர்.
சிறந்த மாலைகளை அணிகின்றனர்.
தங்களைப் பிறர் போற்றிப் பாடும் புகழ்ச்சொற்களைக் கேட்டு பெருமிதம் கொண்டு உலகில் திரிகின்றனர்.
அவர்களின் இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் காரணம் உன் திருவருளே.
Those who carry Your lotus feet in their hearts will virtually become emperors on this earth, with all prosperity at their command. Your sacred feet are wondrous head alankAram for the VedAs. Those who are blessed to hold those sacred feet in their heart for conferral of auspiciousness from early times will have the anugraham of rulership later over the universe with the symbols of royalty: white umbrella, the chamara service and eulogies from the people. They will travel on the streets of their kingdom with a happy state of mind and with garlands of flowers around their shoulders.
The VedAs place Your sacred feet as head jewellery for themselves to bring them auspiciousness. Those who wish to be rulers or Emperors or grand Lords in this universe place Your sacred feet noted for the fragrance of VedAs and meditate on them. You become pleased with their devotion and grant them the positions that they desire. They now sit on a throne under a single white umbrella befitting their rank as yEka ChakrAdhipathi. Servants wave the chamarams on their sides. They adorn beautiful flower garlands. They move around the world in a state of joy listening to the eulogies by their subjects and vassals. All of these glories are a direct result of Your anugraha sakthi!
தாமரை மலரமர்….
பல்லவி
தாமரை மலரமர் பெரிய பிராட்டியே
கோமான் கேசவன் திருமார்பிலுறைபவளே
அனுபல்லவி
மாமறைகளுனது மலரடியைத் தலைமீது
ஆபரணமாய்ப் பூண்டு அழகுடன் திகழ்கிறது
சரணம்
பூமகளே அந்தப் புனித த்திருவடியை
சேமமுடன் துதிக்குமடியவரெல்லாம்
பூமண்டலம் புகழும் பேரரசராகி
வெண்கொற்றக் குடையும் சாமரமும் பெறுவர்
No comments:
Post a Comment