தாமரை மீதமர்ந்தவளே ! அழகிய தாயே / ஜாதி, சம்பகம், முல்லை, மகரந்தப் பொடியுடன் கூடிய நறுமணம் கமழும் தாழம்பூ, கடம்பு, அசோகம், வாகை முதலிய பூக்களைச் சூடியதும் நறுமணப்புகை காட்டப்பெற்றதும், மிகக் கறுத்த மை போன்றதும் மதம் பிடித்த வண்டுக் கூட்டம் போன்றதுமான உனது பின்னிய கூந்தல் என் உள்ளத்தாமரையில் அமரட்டும். (41)
உள்ளத்தாமரையில்…….
பல்லவி
உள்ளத்தாமரையில் வீற்றிருக்க வரவேற்றேன்
வெள்ளைத் தாமரை மீதமர்ந்த ஈச்வரியே
அனுபல்லவி
அள்ளக்குறையாத அருட்செல்வம் தருபவளே
கள்ளழகன் கேசவனின் அன்பு சோதரியே
சரணம்
முல்லை மல்லி ஜாதி சம்பகத்தின் மகரந்தம்
மணம் கமழும் தாழம்பூ கடம்பு வாகையசோகம்
பூக்களையணிந்து நறுமணப் புகையிட்ட
கருவண்டுக் கூட்டமெனக் கருங்கூந்தலுள்ள உன்னை
No comments:
Post a Comment