நாராயணாவென்னும்…..
பல்லவி
நாராயணாவெனும் நாமமே நம் துணை
தீரா வினை தீர்க்கும் திருவருள் சேர்க்கும்
அனுபல்லவி
பேராயிரம் உண்டென்ற போதும்
ஆராவமுதன் கேசவனவன் விரும்பும்
சரணம்
ஶ்ரீராமனவனே கண்ணனுமவனே
நாரதர் நான்முகன் நமச்சிவாயனும்
சூரிய சந்திரனும் சுகசனகாதியரும்
பாரோரனைவரும் திருமகளும் போற்றும்
No comments:
Post a Comment