ஸ்ரீ ஸ்துதி :(10).....!!!
ஆபன்நார்த்தி ப்ரசமந விதௌ பத்த தீக்ஷஸ்ய விஷ்ணோ:
ஆசக்யுஸ் த்வாம் ப்ரிய ஸஹசரீ மைகமத்யோபந்நாம்
பிராதுர்பாவைரபி ஸம தநு : ப்ராத்வமந்வீயஸே த்வம்
தூரோத்க்ஷிப்தைரிவ மதுரதா துக்தராசேஸ் தரங்கை: ||
ஆபத்தை அடைந்தவர்களின் துன்பத்தை ஒழிக்கும் செயலில் விரதம் கொண்ட எம்பெருமானுக்கு உன்னை மன ஒற்றுமையோடு கூடிய பிரியமான துணையாக வேதங்கள் கூறின. தூரத்தில் வீசிய திருப்பாற்கடலின் அலைகளுடன் இனிமை போல நீ அவதாரங்களிலும் கூட ஒத்த திருமேனியோடு ஒற்றுமையாகத் தொடர்கிறாய்.
பெரிய பிராட்டியே!
உன் நாயகனான எம்பெருமான் எவன் துன்பம் அடைந்தாலும் அவன் துன்பத்தை ஒழிப்பதை ஒரு வேள்வியாகக் கருதி இதற்காக தீக்ஷை (விரதம்) கொண்டுள்ளான். இந்த வேள்வியில் அவனோடு ஒ ஸங்கல்பம் பூண்டவளாய் அவன் உள்ளத்துக்கு உகந்த துணைவியாய் நின்று இந்த வேள்வியை செவ்வனே நடத்தச் செய்கிறாய். இந்தக் கருத்தை வேதங்கள் கூறுகின்றன. அடியார்களைக் காப்பதற்கு அவன் ராமன் கிருஷ்ணன் முதலிய பல் வேறு திருமேனிகளைக் கொண்டு பல அவதாரங்களைச் செய்கிறான். அப்பொழுதெல்லாம் நீயும் அவற்றுற்கு ஏற்றவாறு ஸீதை ருக்மிணி என்று திருமேனிகளை எடுத்துக் கொண்டு காத்தல் தொழிலை நன்கு நடை பெறுமாறு செய்கிறாய். ஒரு கணமும் நீ அவனை விட்டுப் பிரிவதில்லை. திருப்பாற்கடலின் அலைகள் வெகு தூரம் சென்று வீசினாலும் அதன் இனிமை கூடவே இருப்பது போல் உன் நாயகன் ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு வேறு உலகம் வந்து அவதாரம் செய்தாலும் நீயும் அவனுடன் வந்து அவ்னக்குத் துணை புரிகிறாய். பாற்கடலை விட்டு இனிமை பிரியாது அல்லவா ?
திருவென்னும் பெயராளே….
பல்லவி
திருவென்னும் பெயராளே பெரிய பிராட்டியே
திருமால் கேசவனை அகலாதிருப்பவளே
அனுபல்லவி
கருமாமுகில் வண்ணன் அடியாரைக்காக்க
அவதரிக்கும் போதெல்லாம் அவனுடனவதரிப்பவளே
சரணம்
திருப்பாற்கடலலைகள் வெகுதூரம் சென்றாலும்
சிறிதுமதன் சுவையை இழக்காதிருப்பது போல்
வருமிடர் தீர்ப்பதில் உறுதியாயிருப்பவனை
அருகினிலிருந்து துணைபுரியும் திருமகளே
No comments:
Post a Comment