மதுரகாளியை….
பல்லவி
மதுரகாளியை மகாசக்தியை
கதியவள் பதமென வணங்கித் துதித்தேன்
அனுபல்லவி
மதுசூதனனெனும் கேசவன் சோதரியை
இதந்தரும் திங்களின் பிறையணிந்தவளை
சரணம்
எதிர் நின்று அரக்கர்களை வதம் செய்தவளை
கதிரவன் ஒளியினும் அதிகமொளியுடையவளை
துதித்திடுமடியவர்க் கருள் தருபவளை
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவளை
No comments:
Post a Comment