அனுதினம் உன்னைப் பாட அடியேனும் ஆண்டாள் இல்லை
அவல்தந்து செல்வம் வாங்க அட நானும் குசேலன் இல்லை
கனவிலும் உன்னைக் கொஞ்ச கண்ணாநான் கோபியர் இல்லை
கடமைசெய் பலனில்லை என்றால் கேட்கநான் அர்ச்சுனன் இல்லை
தினமுந்தன் நாமம் சொல்லித் திரியநான் நாரதன் இல்லை
திறந்து என் நெஞ்சில் உன்னைக் காட்ட நான் அனுமனும் இல்லை.
மனதிலே ஒருநொடி எண்ணி மறுவேலை பார்க்கப் போகும்
மனிதன்நான் என்துயர் போக்க மாதவா மனமா இல்லை?
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
எனக்குமுன்னருள்…
பல்லவி
எனக்குன்னருள் தர மனமில்லையா கண்ணா
வனமாலை துளபமணிந்த கேசவனே
அனுபல்லவி
மனதிலொரு கணப் பொழுது உனை நினைந்த பின்னே
தினசரி என் கடமை செய்யும் மனிதன் நான்
சரணம்
தினமுனது நாமம் சொல்ல நாரதனில்லை நான்
பலன் கருதாமல் கடமையைச் செய்யெனும்
உனது சொல் கேட்க நான் பார்த்தனுமில்லை
மனம் திறந்துனைக் காட்ட அனுமனுமில்லை நான்
தினமுனைப் பாட நான் ஆண்டாளுமில்லை
கனவிலுனைக் கொஞ்ச ராதையுமில்லை
பிடி அவல் தந்து தனம் பெறவே நானும்
உனதுயிர் நண்பன் குசேலனுமில்லை
No comments:
Post a Comment