எப்போதுன் தரிசனம்…..
பல்லவி
எப்போதுன் தரிசனம் கிடைக்குமோ
முப்போதுமுனையே துதித்திடுமெனக்கு
அனுபல்லவி
ஒப்பிலா மணியே பெரிய பெருமாளே
நப்பின்னை மணவாளா நாகத்தணையானை
சரணம்
தப்பேதும் நான் செய்தவனில்லை
இப்போதுமுந்தன் திருநாமம் தனையே
அப்போதைக்கிப்போதே தினமுரைத்தேன்
அப்பா கேசவனே ஶ்ரீ ரங்கநாதா
No comments:
Post a Comment