ஜகன்மாதா.... சிவத்தின் பதிவ்ரதை சிவை சிவே சிவகாமேச்வரி சிவபரா சிவப்ரியா சிவகாந்தா சிவகாமசுந்தரி சிவசங்கரி சிவேச்வரி சிவபத்தினி
சிவவல்லபே சிவங்கரி
சிவகாமேச்வரி…..
பல்லவி
சிவகாமேச்வரி கேசவன் சோதரி
சிவசங்கரி உந்தன் மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
சிவனிடம் கொண்டவளே சிவனின் பாதியே
சிவன் மனங்கவர்ந்த சிவகாமியே
சரணம்
சிவகாமசுந்தரி சிவபத்னியே கௌரி
சிவவல்லபே சிவே திரிபுரசுந்தரி
சிவமயமானவளே சிவானி துர்கே
பவபயம் களைந்திட உனையே துதித்தேன்
No comments:
Post a Comment