திருமணங்கீச்வரர்……
பல்லவி
திருமணங்கீச்வரரை நமச்சிவாயனை
திருமறைகள் போற்றும் ஈசனைத் துதித்தேன்
அனுபல்லவி
திருமால் கேசவனும் பிரமனும் பணிந்தேத்தும்
திருவுடை நாயகிக்கு ஒரு பாகமளித்தவனை
சரணம்
வருந்துயர் பேரிடர் அனைத்தும் நீங்கிடவும்
இருவினைப் பயன்களால் படுந்துயர் விலகிடவும்
பெரும் பிணி பவக்கடல் கடந்திட வேண்டியும்
தருமம் தழைத்திடும் மேலூர் த்தலத்துறை
No comments:
Post a Comment