பதிவில் எழுதப்பட்ட பாசுரம் ஸ்வாமி பெரியாழ்வார் அருளிச் செய்த பெரியாழ்வார் திருமொழி ஆகும்
தான் ஸ்ரீ ராமன் அனுப்பியவன் தான் என்பதை சீதைக்கு உணர்த்த ஸ்ரீ ராம பிரானின் மகிமைகளை அவளுக்கு எடுத்துரைத்து, அதனுடன் ஸ்ரீ ராமன் சொன்ன அடையாளங்களை கணையாழி அளித்து அருள்கிறான் "அடர்த்தியான, நீண்ட கருமையான கூந்தலுடைய அன்னையே. உன் அடியவன் நான் சொல்வதை கேளுங்கள். உயர்ந்த கிரீடத்தை ஏற்றி அரியணையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஜனக மகாராஜாவின் வில்லை உடைத்து அன்னை உங்களை மணம் புரிந்த ஸ்ரீ ராமனின் வீர தீரத்தை யாம் அறிவோம். கடும் தவங்கள் புரிந்து, பெரும் அரசர்களை வீழ்த்திய பரசுராமன் எதிர் கொண்டு வர, ஸ்ரீ ராமன் அவனுடைய பேர் வலிமை பொருந்திய தனுஷை எடுத்து, அவனுடைய தவ வலிமையையும் கொணர்ந்தானே. அதுவும் ஒரு அடையாளம்" என்கிறான்.
அடையாளம் பல…..
பல்லவி
அடையாளம் பல உரைத்த ஆஞ்சநேயனை
இடையறாதென் மனத்தில் நாளும் துதித்தேன்
அனுபல்லவி
படைநடத்தி இலங்கை சென்று ராவணனை வதைத்த
அடலேறு கேசவனை முப்போதும் துதிப்பவனை
சரணம்
அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட அன்னையேயென அழைத்து
மடந்தை ஜானகியின் மனம் மகிழும் வண்ணம்
நடந்த சுயம்வரத்தில் சிவதனுசை முறித்ததையும்
தொடர்ந்து வந்த பரசுராமர் வில் வளைத்தொடித்ததென
No comments:
Post a Comment