அழகாம்பிகையை…
பல்லவி
அழகாம்பிகையை சௌந்தர நாயகியை
மழலையில் அவள் புகழ் பாடித் துதித்தேன்
அனுபல்லவி
சுழலும் சக்கரக் கையன் கேசவன் சோதரி
அழகன் கச்சபேசன் மனங்கவர் நாயகி
சரணம்
அழலேந்தும் நெற்றிக்கண்ணனினிடமமர்ந்து
அழகுடன் காட்சி தரும் குழலம்மை எனும் பெயராள்
பழகு தமிழில் பாமாலை புனைந்து
கழலடி தொழுது அருள் தர வேண்டியே
No comments:
Post a Comment