Oh GodhE! The famous garland Vyjayanthi worn by Your Lord is indeed full of fragrance. It is desired by Him and hence given a prominent place on His chest. It is indeed constructed from tender forest flowers, which never fade. Inspite of all these glories, it is worn on the chest and not on Your Lord's head over His KirItam (Thiru AbhishEkam). The garland that You wore and presented to the Lord is accepted by Him with joy and worn with love on His KiriTam (sarvEsvara Chinnam) to demonstrate Your garland's superiority over Vyjayanathi maalai. Your Lord's respect by wearing the garland worn by You earlier at a high place (over His crown) indicates His affection and reverence for it over the Vyjayanathi maalai.
Swami Desikan uses five “api” sabdham to decribe the special attributes of Vyajayanthi Maalai here to build up the climax to declare how Godhai's SooDikkoduttha Maalai won over former in status. He says “What if (api) Vyjayanthi Maalai has splendid fragrance (aamOdhavathI api), What if it is worn with desire on the chest (HrudhayangamA api), What if it has the color of love/red)(raaga anvithA api), What if it is tender (lalithA api), What if it has few more special favorable attributes (guNa UttharA api), Vyjayanathi Maalai is not worn on His crown by the Lord. That superior position is reserved for the SoodikkoDuttha Maalai of Godhai”
அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வ காலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது, எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை
அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி
பெருமாள் திருமார்பிலேயே வசித்துக் கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும்,
அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!
கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து,
எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான்.
இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான்.
உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு;
இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,
உன் பெருமையைச் சொல்கிறது.
மனம் விரும்பி….
பல்லவி
மனம் விரும்பிக் கேசவன் நீ சூடிக்கொடுத்த மலர்
மாலையையே ஏற்றுத் தன் மகுடத்தில் வைத்துள்ளான்
அனுபல்லவி
இனி வேறு தனிப் பெருமை வேறென்ன வேண்டும்
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே ஆண்டாளே
சரணம்
வனமாலையெனும் வைஜயந்தி மாலை
மனதிற்கினியதாய் மார்பணியாயிருந்தாலென்ன
இனிய மணம் தந்தாலென்ன குணமாயிருந்தாலென்ன
சிவந்த தளிராய் இதழாயிருந்துமென்ன
No comments:
Post a Comment