பவானீ? தனது உடம்பெங்கும் யார் திருநீறு பூசிக் கொண்டு, நஞ்சினை உண்டு, நீண்ட திரித்த சடையுடன், கழுத்தில் நாகத்தை அணிந்து மண்டையோட்டை திரு வோடாய் கையில் ஏந்தியிருக்கிறானோ அவனே பசுபதி, உலகத்தின் தலைவன். அவன் எவ்வாறு சிறப்புற்றது? திருமணத்தில் உனது கரம் பற்றியதாலன்றோ!
நிலவொளி தவழும் முகத்தினளே! என்னிடம் மோட் சத்துக்கான விருப்பம் இல்லை, உலகாயத விருப்பங் களையும் நான் கொண்டிருக்கவில்லை. உலகியலறி வையோ, சவுகரியங்களையோ நான் தேடிக்கொண்டிருக்க
வில்லை. உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் இதுதான் ம்ருதனி, ருத்ரணி, சிவசிவ பவானி' என்று தியானித்த படி இந்த வாழ்க்கையை நான் வாழ வேண்டும்.
உன்னைத் துதிப்பதன்றி….
பல்லவி
உன்னைத் துதிப்பதன்றி வேறொன்றும் வேண்டேன்
அன்னையே பவானி கல்யாணி என்றழைத்து
அனுபல்லவி
புன்னகை முகத்தாளே கேசவன் சோதரி
மின்னல் கொடி இடையாளே வெண்ணிலவைப் பழிப்பவளே
சரணம்
திருவோடெனக் கரத்தில் கபாலமேந்தி
திருநீறு பூசி நீண்ட செஞ்சடையுடனே
கருநாகம் கழுத்தணிந்த நஞ்சுண்ட கண்டன்
ஒரு பாகம் தந்து உனைமணந்து சிறப்புற்றான்
உலகில் நான் பொன்னோ பொருளோ நல்வாழ்வோ
நலந்தரும் புகழோ போகமோ மோட்சமோ
எதுவும் வேண்டிலேன் தாயே தயாபரியே
அலகிலா விளையாடல் பல புரிபவளே
No comments:
Post a Comment