பக்தி நெறி மேலிட்டு பித்தனாய் உன் சன்னதியில்
கவிபாடி தான் பணிந்தேன்
துக்கம் விலக உன் சன்னதியை வலம் வந்தேன்
துன்பமதை தீர்த்தருளுவாய்
ஓங்கார தேவியே உஜ்ஜியினி காளியே
பொன் கரகம் பூண்ட தாயே
அருளோங்கும் அருள்தரு அரங்கனின் தங்கையே அன்னை கண்ணனூர் மாரியே
பித்துப்பிடித்துன்….
பல்லவி
பித்துப்பிடித்துன் சன்னதியில் கிடந்தேன்
முத்துமாரியே சமயபுரத்தாளே
அனுபல்லவி
பக்தி நெறியாலுனைக் கவிபாடித் துதித்தேன்
சித்தர்கள் போற்றும் கேசவன் சோதரியே
சரணம்
புத்தம் புது மலர்தூவி உஜ்ஐயினி காளியே
நித்தமுனைத் துதித்தேன் ஓங்காரதேவிய
அத்தனை சிறப்புடைய கண்ணனூர் மாரியே
சித்தம் தெளிவுபெற மகமாயி உனைப் பணிந்தேன்
பொன் கரகம் பூண்டவளே புகழ்மிகு நீலி
துன்பம் தீர்த்தருள்வாய் பசும்பொற்கொடியே
சன்னதியை வலம் வந்தேன் துக்கம் போக்கிடுவாய்
அன்னையே எனக்கருள்வாய் ஶ்ரீக்ருஷ்ணமாரி
No comments:
Post a Comment