இரவும் பகலும் எண்ணற்ற தவறுகள் புரிபவன் நான். தேவீ, உன் அடிமையாகிய என்னைப் பொறுத்தருள்க.
மகாதேவீ! உன்னை எப்படி வரவேற்பதென்று நான் அறியமாட்டேன். உனக்கு எப்படி வந்தனம் செய்வது, உன்னை எப்படி வழிபடுவது என்பதும் தெரியேன், என்னைப் பொறுத்தருள்க.
தெய்வங்களின் தெய்வமே! நான் மந்திரங்களில்லாதவன், சேவையும் பக்தியும் செய்யாதவன். என்னுடைய வழிப்பாட்டில் திருப்தியுற்று அதைப் பூர்த்தி செய்வாயாக.
வழிபடும் வகையறியேன்….
பல்லவி
வழிபடும் வகையறியேன் அம்பிகையே தேவி
அழியுமிவ்வுலகில் அழியாதிருப்பவளே
அனுபல்லவி
விழிக்குத் துணை நீயே கேசவன் சோதரி
மொழிக்குத்துணை உன் ஆயிரம் நாமங்கள்
சரணம்
எழில் மிகுந்தவளே தெய்வங்களின் தெய்வமே
பழி பாவம் புரிபவன் நான் மந்திரங்கள் ஒன்றறியேன்
அழகியுனை சேவிக்கும் வழியறியேன் மொழியறியேன்
கழலடி நிழல் தந்து காத்தருள்வாய் தாயே
No comments:
Post a Comment