அன்னையே…..
பல்லவி
அன்னை உன்னையே வழிபடும் முறையறியேன்
மந்த மதியேனுனைத் துதிக்கும் நெறியறியேன்
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே மாயே
பன்னகாபரணன் மனங்கவர் நாயகியே
சரணம்
தாயிடம் சென்று சேய் கேட்க வேண்டுமோ
தயை வேண்டுமென்று எனைக்காக்குமீச்வரியே
நோயுடைய மகவெனினும் குறை காணாதவள் நீயே
தாயே சேயெனையே மன்னித்தருள்வாயே
No comments:
Post a Comment