அன்றும் இன்றும்…
பல்லவி
அன்றும் இன்றும் என்றும் நீ தெய்வமென
உன் தாள் பணிந்தேன் கணபதியே அருள்வாய்
அனுபல்லவி
கொன்றரக்கன் கஜமுகனை வதைத்த கரிமுகனே
கன்று தாய்ப் பசுவை அழைத்ததுபோலுனையழைத்தேன்
சரணம்
கொன்ற வார்சடையன் சிவனார் மைந்தனே
குன்றுதோராடும் குமரனுக்கு மூத்தோனே
ஒன்றா உலகத்துயர்ந்த புகழ் பெற்று
பொன்றாது நிற்பவனே பூதகண நாயகனே
No comments:
Post a Comment