#மார்கழி_நாமங்கள்
- ஹரிப்ரியா
விமலன்அமலன், விமலன், நிர்மலன், இந்த நாமங்கள் அனைத்தும் மலங்கள் அற்றவன் அதாவது குறைகள் அற்றவன், தூய்மையானவன் என்று குறிக்கின்றன.
அமலா, விமலா, நிர்மலா என்பவை அதே பொருள் கொண்ட பெண்பாற்பெயர்கள்.
எந்த விதத்திலும் அப்பழுக்கற்றவன், பூரணன். குறையற்ற முழுமைப்பொருளிலிருந்து குறையள்ளவை தோன்றாது. எனவே விமலனிடமிருந்து வெளிவருவது அனைத்தும் குறையற்றவையே. அவனது படைப்புகள் அனைத்திலும் ஒரு சீரமைக்கப்பட்ட ஒழுங்கைக் காணலாம்.
எப்படிப்பட்ட குறைகள் நம்மிடம் இருந்தாலும் குறைகளற்ற அவனது பெயராலேயே அனைத்தும் நிறைந்துவிடுகிறது.
பெரிய ஹோமங்கள், வேள்விகள் செய்யும்போதெல்லாமும் கடைசியில் மந்த்ரஹீனம், க்ரியாஹீனம், பக்திஹீனம் அதாவது சொல்லப்பட்ட மந்திரங்களிலோ, செயல்களிலோ, பக்திபூர்வமான ஸமர்ப்பணத்திலோ குறைகள் இருப்பின், அது இந்த நாமத்தால் நிறைவு செய்யப்படட்டும் என்று வேண்டிக்கொண்டு கோவிந்த கோவிந்தா என்றோ, ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து என்றோ முடிக்கும் வழக்கம் இருக்கிறது.
தான் விமலனாக இருப்பதோடு மட்டுமின்றி தன்னை அண்டியவரையும் தூய்மையாக மாற்றும் இந்த நிமலனைப் பாடி உய்வோம்.
கமலக் கண்ணன்…..
பல்லவி
கமலக் கண்ணன் கழலடி பணிவோம்
அமலன் விமலன் நிர்மலன் பெயர் பாடி
அனுபல்லவி
அமலா விமலா நிர்மலா வென்னும்
கமலமலரமர் திருவின் நாயகன்
சரணம்
அமரருலகக் கடவுளர் அருள் வேண்டி
ஓமங்கள் வேள்விகள் முடிக்கும் தருணத்தில்
நாமங்கள் கோவிந்தா ஓதுவது போலவே
நிமலன் பரிபூரணனவன் நாமங்களோதி
No comments:
Post a Comment