கத்தும் கடலலை…
பல்லவி
கத்தும் கடலலை நடுவினிலே
மெத்தனமாயுறங்கும் கேசவனே
அனுபல்லவி
பத்துத்தலை ராவணனை வதைத்தவனே
வித்தகா வேங்கட கிரிவாசா
சரணம்
பக்தியோடுனை நான் பல நாட்கள்
பாடியே துதித்தேன் நாராயணா
நித்தியம் துதித்திடும் எனக்கருள்வாய்
உத்தமனே சத்தியகிரி நாதா
No comments:
Post a Comment