ஸ்ரீ கோதா ஸ்துதி !
26.
ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ் கடிதாம் க்ருபயா ஸூவ்ருஷ்ட்யா |
தௌர்கத்ய துர்விஷ விநாச ஸூதாநதீம் த்வாம்
ஸந்த : ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் ||
ஸ்ரீ ஆண்டாள் அமுத நதி; எப்படிஎன்றால், திருவரங்கச் செல்வன் ஒரு கார்முகில்; அதில் பெரியபிராட்டி மின்னல்கொடி; இந்த இரண்டுமாக அருள் என்கிற மழை பொழிகிறது; இது வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது, மேடுபள்ளங்களில் நிறைந்து, அங்கு சிக்கித் தவிக்கும் சேதனர்களின் சம்சார தாபத்தை——அந்தத் தீய விஷத்தை, அடித்துத் தூரத் தள்ளி , மிகவும் தெளிந்த அமுத நதியாக இருக்கிறது— அது — ஹே கோதா—நீயே உன்னை அடைந்து சேதனர்கள், தங்கள் தாபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
அமுத நதியாய்
பல்லவி
அமுத நதியாயதனுள் பெருக்கெடுக்கும்
அன்னை கோதையுனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அமரரும் அசுரரும் இருபுறமிருந்து
சமுத்திரம் கடைந்ததில் கிடைத்த அமுதும் நீ
சரணம்
குமதமலர்ப் பெரிய பிராட்டி மின்னலுமாய்
சுமுகன் கேசவன் கார்முகிலுமாய்த் தோன்றி
அருள் மழை பொழிந்ததிலே அடியார்கள் தங்கள்
இருவினைப் பயன் நீங்கி தாபங்கள் தீர்த்திடவே
No comments:
Post a Comment