எனக்கு மந்திரமோ யந்திரமோ தெரியாது. ஏன், உன்னுடைய மகிமையைக் கூட நான் அறியமாட்டேன். உன்னை எப்படி வரவேற்று உபச்சாரம் செய்வது என்பதையும் அறியேன்.எப்படித் தியானிப்பது என்பதையுந்தான். உனது தோற்ற நிலைகளை நான் அறிந்திருக்கவில்லை. உனது முன்னிலையில் அழக்கூடத் தெரியாதவனாயிருக்கிறேன். ஆனால், தாயே! உன்னைப் பின்பற்றுகிறவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்பதை மட்டும் அறிவேன்....
சமயபுர நாயகியே….
பல்லவி
சமயபுர நயகியே அகிலாண்டேச்வரி
சம மென தனக்கொருவர் இல்லாதவளே
அனுபல்லவி
அமரரும் முனிவரும் அரனரியயனும்
அமரேந்திரனும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
மாயமோ மந்திரமோ ஏதும் நானறியேன்
ஓயாதுனைத்துதிக்கும் தியானமுமறியேன்
தூயவளுன் முன்னே அழவும் அறிந்திலேன்
தாள் பணிவோர் துயர் நீக்கும் தாய் மட்டும் என்றறிவேன்
No comments:
Post a Comment