தை மூன்றாம் வெள்ளிக்கிழமை
"ஶ்ரியம் வித்யாம் புத்திம் ஜகதி நமதாம் த்வாமத யஶ:
ஸுபுத்ரான் ப்ராதத்தே தவ சடிதி காமாக்ஷி கருணா
த்ரிலோக்யா மாதிக்யம் த்ரிபுர பரிபந்தி ப்ரணயினி
ப்ரணாமஸ் த்வத்பாதே ஶமித துரிதே கிம் ந குருதே"
மூக பஞ்ச சதீ.... ஸ்துதி சதகம்....
திரிபுர வைரியான எனது தந்தை ஏகாம்ரநாதரின் பால் அன்பு பூண்டவளே! காமாக்ஷி! என் தாயே!!உலகில் உன்னை வணங்குகிறவர்களுக்கு உன் கருணையானது, செல்வம், கல்வி, அறிவு, மேலும் புகழ், நல்ல குழந்தைகளையும் சீக்கிரமே கொடுக்கிறது. மேலும் மூவுலகிலும் உயர்வையும் கொடுக்கிறது! பாவத்தை நீக்கும் உன் சரணங்களில் செய்யப்படும் துதியானது எதைத்தான் செய்யவில்லை!
அதிசயமானவளே….
பல்லவி
அதிசயமானவளே ஆதியே பழம்பொருளே
மேதினியோர் போற்றும் வேதப்பரிபுரையே
அனுபல்லவி
மதி புனல் சூடிய திரிபுராந்தகனை
பதியாக க்கொண்ட கேசவன் சோதரி
சரணம்
கதி நீயென்றே பணிபவர்க்கெல்லாம்
தனம் புகழ் கல்வி மக்கட்ச்செல்வம்
அனைத்தையுமளிப்பவளே தாயே காமாக்ஷி
உனையே துதித்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment