கணபதி உனக்கென்….
பல்லவி
கணபதி உனக்கென் காலை வணக்கம்
கணங்களின் தலைவனே கேசவன் மருகனே
அனுபல்லவி
பிணங்கிய வள்ளி முருகனை மணந்திட
இணக்கமுடன் உதவி செய்த கரிமுகனே
சரணம்
பணம் பதவி புழென எதுவும் வேண்டேன்
அணங்குகள் சித்தி புத்தியுடன் காட்சி தரும்
குண நிதியே குருவே வல்லப நாயகனே
வணங்கிடும் எனையே காத்தருள்வாய்
No comments:
Post a Comment