நல்லறிவுள்ளவன், உனது வில்லைத் தியானிப்பதால் புகழ்பெற்ற வேகமாகப் பரவக் கூடிய பிறவிச்சுழலை உண்டாக்குகிற பெருமயக்கத்தைத் தாண்டுகிறான். புஷ்ப பாணங்களைத் தியானிப்பதால் அந்த பாணத்திற்கு இலக்காகக் கூடிய பஞ்சபூத ஸூக்ஷ்மங்களைக் கடக்கிறான். பாசத்தைத் தியானம் செய்ய, உலகனைத்தையும் துன்புறுத்துகிற
மரணபயத்தைக் கடக்கிறான். பெரும் அரண்போன்ற அங்குசத்தின் தியானத்தால் அளவிற்குட்படாத
மாயையைக் கடக்கிறான்.
அம்பிகையே….
பல்லவி
அம்பிகையே உனை நம்பித் துதிப்பவர்க்கு
தெம்பும் தயவும் நல்லருளும் தருபவளே
அனுபல்லவி
எம்பெருமான் சிவனின் இடப்பாகமமர்ந்தவளே
தும்பி முகன் தாயே கேசவன் சோதரியே
சரணம்
உன் கை வில்லை துதித்திடும் புத்திமான்
பிறப்பிறப்பென்னும் மாயையைக் கடக்கிறான்
மலர்க் கணைகளை மனத்துள் துதிப்பவன்
ஐம்பூதங்களின் நுண்மையைக் கடக்கிறான்
பாசத்தை மனத்துள் இறுத்திப் பணிபவன்
மரண பயம் நீங்கி மகிழ்வுடனிருப்பான்
அங்குசம் தனையே பணிந்திடுமன்பன்
எங்கும் சூழ்ந்திருக்கும் மாயையை வெல்கிறான்
No comments:
Post a Comment