ஸ்ரீஸ்துதி:(23).....!!!
மாதா தேவி த்வமஸி பகவாந் வாஸுதேவ: பிதா மே
ஜாத: ஸோஹம் ஜநநி யுவயோரேகலக்ஷ்யம் தயாயா: |
தத்தோ யுஷ்மத் பரிஜநதயா தேசிகரைப் யதஸ் த்வம்
கிம் தே பூய: ப்ரியமிதி கில ஸ்மேர வக்த்ரா விபாஸி ||
பெரிய பிராட்டியே!
அடியேனுடைய குற்றங்களை எல்லாம் புறக்கணித்து காத்து அருள்வதிலேயே நோக்கம் கொண்ட நீ அடியேனுக்குத் தாயாய் உள்ளாய்.
நான் செய்த பிழைகளுக்காக என்னைத் தண்டித்துத் திருத்தும் நோக்கம் உடையவனான உன் நாயகன் எனக்குத் தந்தை ஆகின்றான்.
இப்படித் தாயும் தந்தையுமாய் நிற்கும் உங்களின் இருவரின் திருவருளுக்கும் முக்கியமான பாத்திரம் ஆகிவிட்டேன்.
உன் திருவருளால் சிறந்த ஆச்சர்யனைப் பெற்றேன். அவர்கள் உங்கள் இருவருக்கும் கைங்கர்யம் புரியும் அடிமையாக என்னை உங்களிடம் ஸமர்ப்பித்தனர்.
இப்பொழுது உன் திருமுகத்தில் தவழும் புன்சிரிப்பை நோக்கும்போது அடியேனை நோக்கி "இன்னும் உனக்குப் பிரியமான எதை நான் செய்ய வேண்டும் ? " என்று திருமுக மலர்ச்சியோடு கேட்பவள் போல் விளங்குகிறாய்.
இன்னுமென்ன….
பல்லவி
இன்னுமென்ன வேண்டுமென எனைக்கேட்டு நீயும்
புன்னகை செய்வதென்ன பெரிய பிராட்டியே
அனுபல்லவி
சென்ன கேசவன் மனங்கவர் செங்கமலமே
மன்னு புகழ் கடலரசன் போற்றும் அலைமகளே
சரணம்
என்னுடைய பிழை பொறுத்து எனக்கருளும் தாயே
தண்டித்துத் திருத்துமுன் நாயகனென் தந்தையானான்
உன்னருளால் பெற்ற குரு உங்களுக்கே தொண்டு செய்ய
என்னைப் பணித்ததனால் உனதடிமையானவனை
No comments:
Post a Comment