ஶ்ரீ ஸ்துதி:(22).....!!!
ஸம்பத்யந்தே பவ பய தமீ
பாநவஸ் த்வத் ப்ரஸாதாத்
பாவா: ஸர்வே பகவதி ஹரௌ பக்திமுத்வேலயந்த: |
யாசே கிம் த்வாமஹமிஹ யத: சீதளோதாரஷீலா
பூயோ பூயோ திசஸி மஹதாம் மங்களாநாம் ப்ரபந்தாந் ||
பெரிய பிராட்டியே! இந்த உலக வாழ்கையாகிற இருளில், அயிரக்கணக்கில் சூரியர்களின் ஒளியைப் போன்ற மிகவும் தூய்மையான மன நிலை உன் திருவருளால் கிடைக்கிறது, இப்படிப்பட்ட அருளைக் கொண்ட எனக்கு எம்பெருமானிடம் மேன்மேலும் பக்தி வளர்கிறது. இப்படி அனேகமாக மக்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளால் எல்லா வளங்களும் கிடைக்கிறது, இப்படி இருந்த போதும் இதில் அனைவரும் உன்னை துதித்தவர்கள் என கூற முடியுமா?? இவை யாவும் எதையும் எதிர்பாராத உன் கருணையின் வெளிப்பாடே, இப்படி வரிசை வரிசையாய் நன்மைகளையும், வளங்கள், செல்வங்கள் என அனைத்தும் உன்னுடைய கடாக்ஷத்தினால் கிடைக்க, எதை அடியேன் உன்னிடம் ப்ரார்த்தித்துப் பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது.
தானே வந்து…..
பல்லவி
தானே வந்து தயவளிக்குமன்னையே
தேனே பெரிய பிராட்டி நீயே
அனுபல்லவி
மானே கேசவன் மார்பணியே
ஆனேனுனக்கடிமை நானே வேறென்செய்ய
சரணம்
ஊனமாயிருக்குமென் மன இருள் நீக்கி
ஞானமாம் கதிரொளியளித்திடும் தாயே
ஏனைய அனைத்தும் தந்தெனையாண்டபின்
நானெதை வேண்டுவேன் மாலோன் துணைவியே
No comments:
Post a Comment