அகிலமனைத்தும்…
பல்லவி
அகிலமனைத்தும் அருணாச்சலேனே
சகலமுமந்த சதாசிவனே
அனுபல்லவி
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
ககனம் புவனம் காற்று நீர் நெருப்பவன்
சரணம்
சுகசனகாதியர் நரர் சுரரிந்திரன்
பகலவன் சந்திரன் பிரமன் கேசவன்
சகலரும் வணங்கிடும் பரம்பொருளவனே
புகலிடம் அவனன்றி வேறி்லை நமக்கே
No comments:
Post a Comment