முழுமதி நிகர்த்த முகம்அருள் பொழிய
முப்புர மெரித்த சிவன்மனம் நெகிழ
தழுவிய இடையில் மேகலை குலுங்க
தாளா நகில்கனம் இடைமெலத் துவள
கழைவில் லுடனே கடிமலர் அம்பும்
கையிலங் குசமும் பாசமும் தரித்து
தொழுதிடும் அடியோர் முன்வந் தருளும்
தேவி என்முன் நீவர வேண்டும் .
திரிபுரசுந்தரியே….
பல்லவி
திரிபுரசுந்தரியே தினமுனைப் பணிந்தேன்
அரியயனரனும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
கரியவன் கேசவன் சோதரி மாயே
சரிநிகர் சமானமில்லாதவளே
சரணம்
நிலவொளியென முகம் அருளினைப் பொழிய
திரிபுரமெரித்த சிவன் மனம் மகிழ
அழகிய இடையில் மேகலையாட
கனந்தரும் முலையால் இடையது துவள
கரும்பு வில்லுடன் மலர்க்கணையேந்தி
கையிலங்குசமும் பாசமும் தாங்கி
வணங்கிடுமடியார்க்கு காட்சிதரும் தேவி
என்முன் எழுந்தருள வேண்டுமெனத் துதித்தேன்
No comments:
Post a Comment