சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.
அரன் அருளிய…..
பல்லவி
அரன் அருளிய சரபேச்வரனை
வரமருள வேண்டுமென வணங்கித்துதித்தேன்
அனுபல்லவி
பரவாசுதேவன் கேசவன் நேசனை
நரர் சுரர் நந்தி இந்திரன் வணங்கிடும்
சரணம்
கரங்கள் நான்கும் கால்களெட்டும்
சிறகுடன் கூரிய நகமும் சிங்கவாலும்
கருட மூக்கும் யானைக் கண்ளும்
கோரப் பற்களும் இரு முகமும் கொண்ட
No comments:
Post a Comment