25.ஜம்பூமூலநிதே ஜநார்தனநுதே ஜம்பாரிஸம்பாவிதே
ஜம்பூத்வீபமநோஜ்ஞகல்பலதிகே ஜஹ்ந்வாத்மஜாசேகரே! ஜன்மவ்யாதிஜராபஹே ஜலமயே ஜாம்பூநதாலங்க்ருதே ஜம்பூநாத மனோஹரே ஜநநுதே வந்தே (அ)கிலாண்டேஸ்வரி !!
நாவல் மரத்தடியிலுள்ள நிதியே, விஷ்ணுவினால் போற்றப் படுவளே, இந்திரனால் பூஜிக்கப்பட்டவளே. ஜம்பூத்வீபத்தில் விளங்கும் மனதைக் கவரும் கற்பகக் கொடியே, கங்கையை முடியிலணிந்தவளே. பிறப்பு, வியாதி, முதுமை முதலியவற்றை போக்குபவளே, ஜலருபிணி, தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டவளே. அகிலாண்டேஸ்வரி உன்னை வணங்குகிறேன்.
தங்கமயமானவளே….
பல்லவி
தங்கமயமானவளே அகிலாண்டேச்வரி
திங்கள் பிறையும் கங்கையுமணிந்தவளே
அனுபல்லவி
செங்கண்மால் கேசவன் மனமகிழ் சோதரி
பங்கயமே சுரபதி துதிக்குமீச்வரியே
சரணம்
நாவல் மரத்தடியே வீற்றிருக்கும் நிதியே
நாவலந்தீவிலுறை கற்பக க்கொடியே
ஜனன மரணச்சுழல் பவப்பிணி களைபவளே
ஜல வடிவானவளே கேசவன் சோதரி
No comments:
Post a Comment