“ மத்யமர் Gem”
இந்த மத்யமர்ல ஜம்னு “ஜெம்” குடுக்கறாங்களே அது பத்திக்கொஞ்சம் சொல்லுங்களேன்.
அட,அதுவா, அதொண்ணும் பெரிய விசயமில்லீங்க. நாம கூட வாங்கலாம்னு நம்ம தல
அதாங்க “ சங்கரு ராஜரத்தினம்” சார் சொன்னாப்ல. அதொண்ணும் அப்படி பிரம்ம
வித்தையுமில்ல, சிதம்பர ரகசியமுமில்ல. நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒரே ஒரு
வேலைதான். ரொம்ப ரொம்ப சுளுவானதுதேன். தெனத்துக்கும் காலை, மதியம்ம, மாலை,
மத்யமர் முகநூல் பக்கத்த ஓபன் பண்ணி வெச்சிட்டு, அதுல வர பதிவுகளெல்லாம்
( பிடிச்சிதோ பிடிக்கலையோ) ( படிச்சோமோ படிக்கலையோ) பார்த்து பொறுமையா
எல்லாத்துக்கும், தினம் தினம், லைக் போட்டுட்டே இருக்கோணம். நடு நடுவில அங்க இங்க
சில போஸ்ட்டுக்கு சபாஷ், பலே, அற்புதம், அருமை, அப்படி, இப்படினு,கமெண்ட்டணும்.
தினமும் இப்படி போட்டுட்டு வெய்ட் பண்ணினா, ஒரு நாள் இல்லாட்டி
ஒருநாள் உனக்கும் இந்த கட்டங்கட்டித்தர “ Gem” கொடுப்பாக.
விசயம் அம்புடுதேன். அடக் கடவுளே இம்புட்டிருக்கா சாமி. அப்ப சரி
நமக்காயிரம் சோலி கெடக்கு அதப் போய் பாக்கோணும். ஆள விடு.
ம்… அப்ப சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிக் கயட்டிக்கற. சரி
அப்பறம் பார்ப்பம்.
No comments:
Post a Comment