இடுகாட்டு எலும்பினை மாலையாய் பூண்டுச்
சுடுகாட்டு சாம்பல் பூசும் உடுக்கை யொலி கிளப்பியே உலகை ரட்சித்திடும்
ஆயி திரு கருமாரியே
எக்கால தேவியே காரண சவுந்தரி
கண்ணகியே உனை பணிந்தேன்
அருளோங்கும் அருள்திரு அரங்கனின் தங்கையே அன்னை கண்ணனூர் மாரியே
இடுக்கண்….
பல்லவி
இடுக்கண் களைந்திடும் சமயபுரத்தாளே எனை
தடுத்தாட் கொள்ள தருணமிதுவே
அனுபல்லவி
படுத்துறங்கும் திருமால் கேசவன் சோதரியே
எடுத்த ஜனனம் கணக்கிலடங்காது
சரணம்
இடுகாட்டெலும்பினை மாலையாயணிந்தவளே
சுடுகாட்டில் கிடக்கும் சாம்பல்தனைப் பூசிய
உடுக்கையொலியெழுப்பி உலகினைக் காப்பவளே
அடுத்து வந்த என்னை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment