அம்போஜாஸந முக்யஸேவிதபதே அம்போதரச்யாமலே அங்காகல்பித ரத்ன விபூஷணசதே அண்டௌகஸம்ஸேவிதே அம்பாகாசதயா விபக்த புவநே அம்போருஹாங்க்ரித்வயே அஹ்நாயாந்தகஸூதன ப்ரியதமே வந்தே (அ)கிலாண்டேஸ்வரி !/
பிரமன் முதலானோரால் சேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையவளே நீருண்ட மேகம்போல் கருத்தவளே. ரத்தினங்கள் நூற்றுக்கணக்கானவை பதித்த அணிகள் பல அணிந்தவளே, எல்லா
அண்டங்களாலும் சேவிக்கப்பட்டவளே. நீர் ஆகாயம் என்பவற்றால் உலகத்தை பாகுபாடு செய்தவளே. தாமரைப்போன்ற இருதிருவடி களையுடையவளே, விரைந்து காலனை அழித்த காலகாலரின் மனைவியே. அகிலாண்டேஸ்வரி (உன்னை) நமஸ்கரிக்கின்றேன்.
சகலமும் நீயென…..
பல்லவி
சகலமும் நீயென உனையே துதித்தேன்
அகிலாண்டேச்வரி எனக்கருள்வாயே
அனுபல்லவி
முகி்ல் வண்ண நிறத்தாளே பிரமனுமிந்திரனும்
சகலரும் வணங்கிடும் மலர்ப்பதமுடையவளே
சரணம்
மகிடனை மாய்த்தவளே ஆகாயம் நீரென
அகிலத்தைப் பிரித்தவளே வைரம் வைடூர்யமெனத்
தக தகக்கும் வண்ணமய அணிமணிகளணிந்தவளே
அகில லோக நாயகியே காலகாலன் துணைவியே
No comments:
Post a Comment