தை இரண்டாம் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் !
शनैस्तीर्त्वा मोहाम्बुधिमथ समारोढुमनसः
क्रमात्कैवल्याख्यां सुकृतिसुलभां सौधवलभीम् ।
लभन्ते निःश्रेणीमिव झटिति कामाक्षि चरणं
पुरश्चर्याभिस्ते पुरमथनसीमन्तिनि जनाः ॥40॥
ஶனைஸ்தீர்த்வா மோஹாம்புதிமத ஸமாரோடுமனஸ:
க்ரமாத்கைவல்யாக்யாம் ஸுக்ருதிஸுலபாம் ஸௌதவலபீம்
லபந்தே நி:ஶ்ரேணீமிவ சடிதி காமாக்ஷி சரணம்
புரஶ்சர்யாபிஸ்தே புரமதனஸீமந்தினி ஜனா
மூக பஞ்ச சதீ....
பாதாரவிந்த சதகம்....
முப்புர வைரியான ஏகாம்ரநாத வல்லபையே!! என் தாயே!! காமாக்ஷி அம்மையே!! மெள்ள மெள்ள ஆசையெனும் கடலைத் தாண்டி, புண்ணியம் செய்தவர்களால் அடையத்தக்க மோக்ஷம் எனும் மேன்மாடத்தை முறையோடு அடைய விரும்பும் மக்கள், ஏணி போல் விளங்கக்கூடிய உன் திருவடியை பலவிதமாக வழிபட்டு அடைகிறார்கள்!!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையவளே !
முப்புரமெரிசெய்த….
பல்லவி
முப்புரமெரிசெய்த ஏகாம்பரேச்வரரின்
ஒரு புறமமர்ந்தவளே தாயே காமாக்ஷி
அனுபல்லவி
முப்பெருந்தேவியே கேசவன் சோதரி
இப்பிரபஞ்சமே இனிது போற்றிடும்
சரணம்
புண்ணியம் செய்த தவத்தினரடியார்
பண்ணிய இருவினைப் பயன்களைத்தொலைத்து
விண்ணுலக முக்தி பெற உனதடியே ஏணியாய்
எண்ணித்துதித்துனை போற்றி வணங்கினர்
No comments:
Post a Comment