Saturday, 30 April 2022

தெரிந்தோ….

 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் 

"சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்தி"  என்று வருகிறது. 

இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.  நமோ நாராயணா.... கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா! கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா!


                                            தெரிந்தோ….


                                                    பல்லவி

                               தெரிந்தோ தெரியாமலோ அவன் நாமம் சொன்னாலும்

                               அரியந்தக் கேசவன் நலமனைத்தும் தருவான்

                                                 அனுபல்லவி

                               புரிந்தோ புரியாமலோ அழைக்கும் தன் குழந்தையை

                               பரிவுடனெடுத்து அணைத்திடும் தாய் போலவே

                                                     சரணம்

                               நாராயணனவன் நாமமே  அறியாமல்

                               ஆராவமுதனந்த சாரங்கபாணி நாமம்

                               தோராயமாகவே சொன்னாலும் போதும்

                               தீரா வினை தீர்த்து அருள் மழை பொழிவான்

                               

 

                               

No comments:

Post a Comment