தானமே…..
பல்லவி
தானமே அனைத்திற்கும் பிரதானம் (-அன்ன)
ஞானம் கல்வி செல்வம் புகழைவிடவும்
அனுபல்லவி
மோனத் தவம் செய்யும் முனிவரும் மற்றும்
ஞானியரும் பாமரரும் யாவரும் சொல்வது
சரணம்
கூனல் பிறையணிந்த நமச்சிவாயனும்
ஆனிரை மேய்த்த கேசவன் நாராயணனும்
வானுறை அமரருமிந்திரனும் போற்றும்
தானெனுமகந்தையின்றிச் செய்யுமன்ன
No comments:
Post a Comment