श्यामा काचन चन्द्रिका त्रिभुवने पुण्यात्मनामानने
सीमाशून्यकवित्ववर्षजननी या कापि कादम्बिनी ।
मारारातिमनोविमोहनविधौ काचितत्तमःकन्दली
कामाक्ष्याः करुणाकटाक्षलहरी कामाय मे कल्पताम् ॥ ६॥
ஶ்யாமா காசன சன்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்மனாமானனே
ஸீமாஶூன்யகவித்வவர்ஷஜனனீ யா காபி காதம்பினீ |
மாராராதிமனோவிமோஹனவிதௌ காசிதத்தமஃகன்தலீ
காமாக்ஷ்யாஃ கருணாகடாக்ஷலஹரீ காமாய மே கல்பதாம் ||6||
ஸீமாஶூன்யகவித்வவர்ஷஜனனீ யா காபி காதம்பினீ |
மாராராதிமனோவிமோஹனவிதௌ காசிதத்தமஃகன்தலீ
காமாக்ஷ்யாஃ கருணாகடாக்ஷலஹரீ காமாய மே கல்பதாம் ||6||
கடைக்கண்ணருள்……
பல்லவி
கடைவிழியருள் தந்து காத்திடுவாய் காமாக்ஷி
இடையாறாதுன் கழலடியே பணிந்தேன்
அனுபல்லவி
இடைக்குலத்துதித்த கேசவன் சோதரி
படைநடத்தி மகிடனை மாய்த்த பரமேச்வரி
சரணம்
கருநிற நிலவென மின்னும் கருவிழியோரம்
கருமேகக்கூட்டமாய்க் காத்திருக்குமருட்கவிகள்
காமனின் வைரி மேல் கவிபாட விழைவது போல
எனக்குமுன்னருள் கிடைத்திட வேண்டினேன்
No comments:
Post a Comment