என் கணவரிடம் கூட ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல உலகைக் காக்கும் பரம்பொருள்.
விஸ்வரூபன் தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலங்களையே தாங்கி நிற்கிறான்.
பாதாள லோகமே அவனது பாதங்கள். ப்ரம்மலோகமே அவன் சிரசு கதிரவனே அவனது கண்கள் மேகமே அவனது கேசம் அவன் இமைப்பதே இரவு பகலாகிறது.
திசைகளைனைத்தும் அவனுக்கு செவிகள்
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது.
அவன் வேதத்தின் சாரம்
ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை. அதனால் தான் நீ வென்றாய் என்றாள்.
ஶ்ரீ ராமனே…….
பல்லவி
ஶ்ரீ ராமனே உலகைக் காக்கும் பரம்பொருள்
பாரோர் புகழ்ந்தேத்தும் ரகுகுல நாயகன்
அனுபல்லவி
ஈரேழுலகங்களை அங்கங்களில் தாங்கி நிற்கும்
நாராயணனெனும் கேசவனுமவனே
சரணம்
பாதாளலோகமவன் அரவிந்த பாதங்கள்
பூதலம் புகழும் ப்ரம்மலோகமவன் சிரம்
கதிரவனே கண்கள் மேகமே கேசம்
அவன் சிமிட்டுவதே இரவு பகலாகும்
திசைகளே செவியாக திருநாமம் பாவம் போக்க
அசையும் பொருளுமசையாப்பொருளுமாய்
இசையின் வடிவுமாய் வேதத்தின் சாரமாய்
ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்லென விளங்கும்
No comments:
Post a Comment